Tuesday, July 21, 2020

முதல் படி, முதல் பதிவு

இன்றைய பரபரப்பான பொருளியல் சார்ந்த வாழ்க்கையில், மன அமைதியை தொலைத்து     நகர்ப்புற (Concrete Jungle) வாழ்வில் சிக்கித் தவிக்கின்றோம். வருடத்தில் ஒரு முறையோ இரு முறையோ பயணிக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாம் ஒரு மலைவாசஸ்தலத்திற்கோ சொந்த கிராமத்திற்கோ போக திட்டமிட்டிருப்போம். அதுவும் பல சமயங்களில் நிறைவேறாத ஆசை தான்.  ஆனால் நம்மில் பலர் அதுபோன்ற ஒரு பயணத்திற்காக தொடர்ந்து ஏங்கிக்கொண்டிருப்போம்.

நாம் ஒன்றை மறந்துவிட்டோம், சுற்றுலா சுற்றுலா என்ற பெயரில் இப்போது நாம் உண்மையில் மீதமுள்ள இயற்கைக் காடுகளையும், நீர் நிலைகளையும் அச்சுத்தம் செய்கின்றோம். இன்றைய நாட்களில் சுற்றுலா தலங்களிலும் மரம் செடிகளைக் காட்டிலும் மனித நடமாட்டமே அதிகம் உள்ளது. சமிபத்திய கொரோனா (COVID-19) பெருந்தொற்று நமக்கு வேறு புதிய விசயங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது. உலகமயமாக்கள்/நகரமயமாக்களின் ஒரு வகையான பாதிப்பை நமக்கு உணர்த்தி உள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, வீதியில் நடப்பதே ஆபத்தென  வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலைக்குத் தல்லப்பட்டு விட்டோம். நாம், நம் வருங்கால தலைமுறை இந்த கற்பினையை கொண்டு இயற்கையிடம் பணிந்து அதனை பேணி காக்க வேண்டும். பல முன்னோடிகள் அத்தகைய பயணத்தை இனிதே துவக்கி நமக்கு வழிகாட்டி உள்ளனர்.

இன்றும் நான் நம்புகிறேன், தேவையான வாழ்வியலின் அடிப்படை பாடங்கள் பள்ளி நூல்களிலேயே கற்பிக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு நான் கற்றுக்கொண்டவை அனைத்தும் நம் இயல்பு வாழ்வின் தேவைக்கு அப்பாற்பட்டவை எனவே நான் நினைக்கின்றேன்.

பள்ளி பருவத்திலிருந்தே,  இதிகாசக் (Indian epics) கதைகளில் கேள்விப்பட்டதைப் போல் அடர்ந்த காட்டுக்குள் ஒரு சிறிய குடிசையில் வசித்து, காடு தோரும் உல்லாசமாய் சுற்றித்திரிந்து, வேண்டிய கனிகளை பரித்து உண்டு, அங்கேயே வாழவும் விரும்பினேன். நான் அதைப் பற்றி பல முறை கனவு கண்டதும் உண்டு.

நம்மில் பலருக்கு இதுபோன்ற கனவுகள் இருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆர்வம் மற்றும் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் சொந்தமாக  ஒரு நில  பரப்பை  வேளாண் காடாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அது நம் வீட்டை ஒட்டிய இரண்டு சென்டு நிலமாக கூட இருக்கலாம். அது குறைந்தது நம் வீட்டின் அன்றாட காய்கறி அல்லது கீரை தேவையை நஞ்சில்லாது பூர்த்தி செய்யின் மிக்க நன்று. ஓர் இரு மரம் இருப்பின், அது அவ்விடத்தின் இயற்கை சூழலை மேன்மை படுத்தும். இந்த வலைதளம் அத்தகைய  எனது முயற்கசியை பதிவு செய்யும்.
குறிப்பு: இது தமிழில் எனது முதல் பதிவு 😊

1 comment:

  1. கானகத்தில் பூத்த வலைப்பூ

    ReplyDelete